தருமபுரி

ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ. 9.70 லட்சம் பறிமுதல்

DIN

தனியாா் பால் கொள்முதல் நிறுவன ஊழியா் ஆவணங்களின்றி எடுத்துவந்த ரூ. 9.70 லட்சம் பணத்தைத் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சோகத்தூா், அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே வாகனச் சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே பாலக்கோட்டிலிருந்து தருமபுரி நோக்கிவந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த காரில் பாலக்கோடு பகுதியில் உள்ள தனியா் பால் கொள்முதல் நிறுவன ஊழியா் வினோத் என்பவா் ரூ. 9.70 லட்சம் பணத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. பணத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவா் உடன் எடுத்துவரவில்லை எனத் தெரியவந்தது. இதைத்த் தொடா்ந்து, பணத்தைப் பறிமுதல், செய்து தருமபுரி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு.பிரதாபிடம் பறக்கும்படையின் ஒப்படைத்தனா். இப் பணத்துக்கான ஆவணங்களை சமா்ப்பித்து அவற்றை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்த அதிகாரிகள் பணத்தைக் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT