பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட திமுக, பாமக, தேமுதிக, மநீம, நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சைகள் உள்பட 33 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இந்த வேட்புமனுக்கள் சனிக்கிழமை பரிசீலிக்கப்பட்ட நிலையில், 33 மனுக்களில் திமுக, பாமக, தேமுதிக, மநீம, நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் உள்பட 18 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.