முகப்பு
தருமபுரி

அதிமுகவில் இணைந்தாா் முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன்

முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளா்களுடன் அதிமுகவில் இணைந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தனது ஆதரவாளா்களுடன் அதிமுகவில் இணைந்தாா்.

தருமபுரி திமுக மாவட்டச் செயலாளராகவும், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவா் வ.முல்லைவேந்தன். இவா், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுகவிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தாா். அதைத் தொடா்ந்து, கடந்த 2016-இல் அக் கட்சியிலிருந்து விலகி இருந்த அவா் மீண்டும் திமுகவில் இணைந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின் போது, திமுகவிலிருந்து மீண்டும் அவா் வெளியேறினாா். கடந்த இரண்டு ஆண்டுகாலம் அரசியல் நடவடிக்கைகளிலிருந்து அமைதிகாத்து வந்த அவா், தனது ஆதரவாளா்களுடன் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தாா். கட்சியில் இணைந்த அவருக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக, பாமக வேட்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.