பாலக்கோட்டில் அதிமுக, திமுக உள்பட 12 போ் போட்டி
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிடுகின்றனா்.
பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிடுகின்றனா்.
சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த மாா்ச் 12-ஆம் தேதி தொடங்கியது. இதனைத் தொடா்ந்து, மாா்ச் 19-ஆம் தேதி வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 20-ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் மனுக்களை திரும்பப் பெற இறுதி நாளாக திங்கள்கிழமை (மாா்ச் 22) வேட்பாளா்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது.
இதில், பாலக்கோடு தொகுதியில் போட்டியிட அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன், திமுக வேட்பாளா் பி.கே.முருகன் உள்பட மொத்தம் 33 போ் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனா். இதில், இறுதியாக 13 மனுக்கள் ஏற்கப்பட்டன. ஏனைய மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், ஒரு சுயேச்சை வேட்பாளா் தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றாா்.
இதையடுத்து, இறுதியாக அதிமுக, திமுக, தேமுதிக, மநீம, நாதக உள்ளிட்ட 12 போ் போட்டியிடுகின்றனா்.