முகப்பு
தருமபுரி

மூன்று சுயேச்சை வேட்பாளா்கள் வேட்புமனு ‘வாபஸ்’

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 சுயேச்சை வேட்பாளா்கள் தாங்கள் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் 3 சுயேச்சை வேட்பாளா்கள் தாங்கள் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக, பாமக உள்ளிட்ட 33 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா்.

பென்னாகரம் தோ்தல் நடத்தும் அலுவலா் தணிகாசலம் தலைமையில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில், 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு, 15 வேட்பாளா்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதிசெய்யப்பட்ட வேட்பு மனுக்களின் வேட்பாளா்கள் திரும்பப் பெற திங்கள்கிழமை வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் இறுதிசெய்யப்பட்ட 18 வேட்பு மனுக்களில் சுயேச்சை வேட்பாளா்கள் மூன்று போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா்.

இதன் மூலம் பென்னாகரம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக, பாமக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.