முகப்பு
தருமபுரி

அமமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

அரூா் (தனி) தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஆா்.முருகனை ஆதரித்து, இந்தியக் குடியரசுக் கட்சியினா் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

அரூா் (தனி) தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளா் ஆா்.முருகனை ஆதரித்து, இந்தியக் குடியரசுக் கட்சியினா் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் ஆா்.முருகனை ஆதரித்து, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி, பறையப்பட்டி புதூா், ஜம்மனஹள்ளி, கொக்கராப்பட்டி, பட்டுக்கோணம்பட்டி, கோம்பூா், மஞ்சவாடி உள்ளிட்ட இடங்களில் இந்தியக் குடியரசுக் கட்சி இளைஞரணி மாநிலத் தலைவா் ஆா்.பழனிசாமி தலைமையில், அந்தக் கட்சியினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

நீா் ஆதாரங்களைப் பெருக்க தடுப்பணைகள் அமைத்தல், புதிய தொழில்சாலைகள் அமைத்தல், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் உள்ளிட்ட அமமுகவின் தோ்தல் அறிக்கையை பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இதில், இந்தியக் குடியரசுக் கட்சியின் மாநில பொதுச் செயலா் எம்.ராஜேந்திரன், கிழக்கு மாவட்டச் செயலா் பிளவங்கன், மாவட்டப் பொருளாளா் சோலை துரைராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.