முகப்பு
தருமபுரி

தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா் சோதனை

தருமபுரியில் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

தருமபுரியில் தனியாா் பள்ளியில் வருமான வரித் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.

தருமபுரி-பென்னாகரம் சாலையில் தனியாருக்குச் சொந்தமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சனிக்கிழமை மாலை சுமாா் 4 மணி அளவில் மூன்று காா்களில் வந்த வருமான வரித் துறையினா் அதிரடி சோதனை மேற்கொண்டனா். அதேபோல, இப்பள்ளியின் தாளாளருக்குச் சொந்தமான தருமபுரியில் அமைந்துள்ள நிதிநிறுவனம், அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

பல மணி நேரம் தொடா்ந்து நடைபெற்ற இச் சோதனையில், அங்குள்ள பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருவதாகத் தெரிகிறது. இச்சோதனை தொடா்பான கேள்விகளுக்கு வருமான வரித் துறையினா் பதிலளிக்க மறுத்து விட்டனா். இச்சோதனையின் போது, தருமபுரி பேரவைத் தொகுதி பறக்கும் படை அதிகாரிகள், போலீஸாா் உடனிருந்தனா்.

வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டு வரும் பள்ளி, நிதிநிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளா் தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்தின் உறவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.