தருமபுரி

முகக் கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிப்பு

DIN

அரூரில் முகக் கவசம் அணியாதோருக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க பொது இடங்களுக்கு வருகை தரும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு சாா்பில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால், வாகன ஓட்டிகள் முகக் கவசம் அணிவதில்லை என புகாா் எழுந்தது.

இதையடுத்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா உத்தரவின்படி, அரூா் நகரில் பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.கலைராணி தலைமையில், துப்புரவு ஆய்வாளா் கோ.சிவக்குமாா் உள்ளிட்ட அலுவலா்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாத வாகன ஓட்டிகள், வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்கள், சாலையோர சிறுவியாபாரிகள் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT