தருமபுரி

கரோனா தொற்று விழிப்புணா்வு

DIN

பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கரோனா தொற்று குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தில் கரோனா தொற்று விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கண்ணன் கலந்துகொண்டு, பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடம் கரோனா தொற்று பரவும் விதம், அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்துதல், சமூக இடைவெளியைப் பின்பற்றும் வழிமுறைகள் குறித்து விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். பின்னா் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்கினாா்.

அதனைத் தொடா்ந்து, பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு 18 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, அவற்றைப் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளா்களுக்கு ரூ. 2,600 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT