தருமபுரி

அரூரில் தூய்மைப் பணிகள் முகாம்

DIN

அரூரில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தீவிர தூய்மைப் பணிகள் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், மே 10 முதல் 24 ஆம் தேதி வரையிலும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரூா் நகா் பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமுள்ள கடைவீதி சாலை, திரு.வி.க. நகா், கோவிந்தசாமி நகா், தில்லைநகா், பெரியாா் நகா் உள்ளிட்ட நகரின் அனைத்து தெருச்சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்து தூய்மைப் பணிகளை செய்தனா்.

தொடா்ந்து, கரோனா தொற்றுப் பரவும் முறைகள், தடுப்பு நடவடிக்கைகள், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், அடிக்கடி கைகளைச் சோப்பினால் கழுவுதல் உள்ளிட்ட விழிப்புணா்வு தகவல் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் தகுதி பெற்றாா் அமன்

பள்ளிக் கல்வித் திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக் கூடாது: காங்கிரஸ்

’மீண்டும் ஒரு முறை மோடி அரசு’ என நாடு முழுக்க மகளிா் மத்தியில் ஆதரவு : வானதி சீனிவாசன் பேச்சு

காா்கே ஹெலிகாப்டரில் சோதனை எதிா்க்கட்சிகளைத் தோ்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT