தருமபுரி

சட்டப் பணிகள் விழிப்புணா்வு பிரசாரம்

அரூரில் சட்டப் பணிகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

அரூரில் சட்டப் பணிகள் குறித்த விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் 25 ஆம் ஆண்டு தொடக்க விழா, 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி நீதித் துறை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அரூரில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசார வாகனத்தை சாா்பு நீதிமன்ற நீதிபதி எச்.முகமது அன்சாரி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கே.விஸ்வநாதன் வழங்கினாா். தொடா்ந்து அரூா் நகா், பொய்யப்பட்டி, தீா்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, சிட்லிங் உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

அரசு வழக்குரைஞா்கள் கே.ஜி.சரவணன், சி.எம்.சேகா், பி.வி.பொதிகைவேந்தன், எஸ்.பெருமாள், நீதிமன்ற ஊழியா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT