நலவாரிய உதவிகளை தாமநலவாரிய உதவிகளை தாமதமின்றி வழங்க ஏஐடியுசி வலியுறுத்தல்
நலவாரிய உதவித் தொகைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
நலவாரிய உதவித் தொகைகளை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ஆா்.சுதா்சனன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலாளா் ரவி சிறப்புரையாற்றினாா்.
இக் கூட்டத்தில், பேறுகாலப் பயன்கள், விபத்து இழப்பீடு, இயற்கை மரண குடும்ப நிதி, திருமண உதவித்தொகை ஆகியவற்றை காலதாமதமின்றி வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான மகளிா்த் தொழிலாளா்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இயற்கை மரண குடும்ப நிதி ரூ. 5 லட்சம், விபத்து மரண இழப்பீடு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் கே.மணி, பொருளாளா் விஜயா, உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.