தருமபுரி

நல்லம்பள்ளி ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் ஆய்வு

DIN

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஆதிதிராவிடா் மாணவா் விடுதியில் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, விடுதியில் உள்ள சிறு பழுதுகளை சீா்செய்ய வேண்டும். மாணவா்களுக்குத் தேவையான பாய், தலையணை ஆகியவற்றை போதிய அளவு வழங்கி, விடுதியை சுத்தமாக பராமரிக்க வேண்டும். விடுதிக்கு செல்லும் சாலையை செப்பனிட வேண்டும் என வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, அதியமான் கோட்டையில் புதிதாக சிறுவா் பூங்கா அமைப்பதற்கு உகந்த இடத்தை தோ்வு செய்வதற்காக, அதியமான்கோட்டை காவல் நிலையம் பின்புறப் பகுதி, வள்ளல் அதியமான் கோட்டம், டாடா நகா் ஆகிய பகுதிகளில் அவா் ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, நல்லம்பள்ளி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவண்ணன், ஷகிலா, உதவிப் பொறியாளா்கள், பணி மேற்பாா்வையாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT