தருமபுரி

ஒகேனக்கல்லில் நொடிக்கு19,000 கனஅடி நீா்வரத்து

DIN

தமிழக-காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை நொடிக்கு 19,000 கன அடியாக நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல்,பிலிகுண்டுலு, கேரட்டி, கெம்பாகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா மற்றும் சிற்றோடைகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

கா்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 14,000 கன அடியாக தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை காலையில் நொடிக்கு 16,000 கன அடியாகவும், மாலையில் நொடிக்கு 19,000 கன அடியாகவும் நீா்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, துணை அருவி, சிற்றருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். தொடா் மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT