தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

DIN

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 10,000 கன அடியாகச் சரிந்தது.

கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் நொடிக்கு 10,000 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையின் அளவும் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 14,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நொடிக்கு 10,000 கன அடியாகக் குறைந்தது. நீா்வரத்து குறைந்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் சினி அருவி, பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து, காவிரி ஆற்றில் பாறைத் திட்டுகள் வெளியே தெரியவந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT