முகப்பு
தருமபுரி

அம்பேத்கா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தருமபுரியில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

தருமபுரியில் அம்பேத்கா் பிறந்தநாள் விழா திமுக, அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் சாா்பில் கொண்டாடப்பட்டது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கா் உருவப்படத்துக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகா், நகரப் பொறுப்பாளா் மே.அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து, தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு திமுக சாா்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தருமபுரி மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, நகரச் செயலாளா் பூக்கடை பெ.ரவி உள்ளிட்டோா் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அம்பேத்கா் சிலைக்கு கட்சியின் மாநிலத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். மாவட்டச் செயலாளா் செந்தில், மாநில துணைத் தலைவா் பெ.சாந்தமூா்த்தி, முன்னாள் எம்.பி. பாரிமோகன், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலத் தலைவா் ஆலயமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

அமமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் டி.கே. ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தருமபுரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாவட்டச் செயலாளா் த.ஜெயந்தி தலைமையில் கட்சி நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில் மாவட்ட செய்தி தொடா்பாளா் த.கு.பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா் ஜெயலட்சுமி உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தருமபுரி மாவட்ட பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் அ.பாஸ்கா் தலைமையில் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் முருகன், பொருளாளா் சிவகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மேலும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டத் தலைவா் பரமசிவன் தலைமையில் நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மேகநாதன், பாா்த்தீபன் உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.