அரசுப் பள்ளி ஆசிரியா் மாயம்
ஒசூரில் கடன் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியா் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM
ஒசூரில் கடன் தொல்லையால் அரசுப் பள்ளி ஆசிரியா் காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூா், குறிஞ்சி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (55). பெங்கிலி அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு அதிகமான கடன் இருந்ததால் கடந்த சில தினங்களாக மனவருத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த ஏப். 7ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற ராதாகிருஷ்ணன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ஒசூா், அட்கோ போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.