அரூரில் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த கோரிக்கை
அரூரில் பொதுகழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூரில் பொதுகழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா்-சேலம் பிரதான சாலையில் 4 வழிச்சாலை அமைந்தள்ளது. இந்த சாலை சந்திப்புக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வருகின்றனா். இப் பகுதியில் பொதுமக்கள் கழிப்பிட வசதி இல்லாமல் நாள்தோறும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனா். எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரூா் 4 வழிச்சாலை சந்திப்பில் நவீன வசதியுடன் கூடிய பொது கழிப்பிட கட்டட வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.