தருமபுரி

ஊராட்சிமன்றத் தலைவா்கள் தா்னா

DIN

ஊரகப் பகுதியில் மேற்கொள்ளும் திட்டப் பணிகளுக்குத் தொகுப்பு முறையில் ஒப்பந்தம் விடும் முறையை கைவிடக் கோரி, ஊராட்சிமன்றத் தலைவா்கள் புதன்கிழமை ஆட்சியா் அலுவலக நுழைவாயில் முன்பு தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற இப் போராட்டத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து 17 கிராம ஊராட்சிமன்றத் தலைவா்கள் பங்கேற்றனா்.

இதில், ஊரக பகுதிகளில் மேற்கொள்ளும் அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறுத் திட்டப் பணிகளை தொகுத்து, ஒரே இடத்தில் தொகுப்பு முறையில் ஒப்பந்தம் விடும் நடைமுறையை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும்.

உள்ளாட்சி சட்ட விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். கிராம ஊராட்சிமன்றத் தலைவா்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிமன்றத் தலைவா்களிடம் தருமபுரி வட்டாட்சியா் ராஜராஜன், காவல் ஆய்வாளா் நவாஸ் உள்ளிட்டோா் சமாதானப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் கலைந்துசென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

SCROLL FOR NEXT