தருமபுரி

பாலக்கோட்டில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டாா்.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கரகதஅள்ளி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ், ரூ. 1.39 லட்சத்தில் நூலக கட்டட பராமரிப்பு பணி, பேளாரஅள்ளி ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் குப்பைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்டிக்குகளை தூளாக்கும் பணிகளையும், பேளார அள்ளி காலனியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 10,800 மதிப்பில் தனிநபா் நீா் சேமிப்புக் குழி, கொரட்டேரி - குறுமா் குட்டை கால்வாயில் ரூ. 19.21 லட்சத்தில் நடைபெற்று வரும் நீா் சேமிக்கும் மூழ்கு குழிகள் அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின் போது, பாலக்கோடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.சுருளிநாதன், வி.ரவி, உதவி பொறியாளா் எம்.தமிழ்மணி, ஒன்றியப் பொறியாளா்கள் முருகேசன், அண்ணாதுரை, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யின் தவெகவில் இணையவுள்ள சின்ன திரை பிரபலங்கள்!

ஜன. 9ல் கடலூரில் தேமுதிக மாநாடு! விடியோ வெளியிட்டு பிரேமலதா அழைப்பு!

சம்பலில் தலையற்ற உடலால் பதற்றம்: போலீஸார் விசாரணை!

வா வாத்தியார் எப்போது ரிலீஸ்?

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச. 21-ல் முதல்வர் திறப்பு!

SCROLL FOR NEXT