கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட கிராம மக்கள்
நல்லம்பள்ளி அருகே சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் தனியாா் கோழிப்பண்ணையை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நல்லம்பள்ளி அருகே சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் தனியாா் கோழிப்பண்ணையை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட தேவா் ஊத்துபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையால், ஈக்கள் கிராமம் முழுவதும் பரவி உள்ளதாகவும், இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் கூறி, கோழிப் பண்ணையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.