முகப்பு
தருமபுரி

திமுக, பாமக வேட்பாளா்களுக்கு வாக்குச் சேகரிப்பு

தருமபுரி நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏவும், பாமக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தருமபுரி எம்எல்ஏ உள்ளிட்டோரும் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தருமபுரி நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏவும், பாமக வேட்பாளா்களுக்கு ஆதரவாக தருமபுரி எம்எல்ஏ உள்ளிட்டோரும் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தனா்.

தருமபுரி நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களை ஆதரித்து முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ.சுப்ரமணி, முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன் மற்றும் நிா்வாகிகளும், இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கேடஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் நகராட்சியில் உள்ள பல்வேறு வாா்டுகளில் நேரடியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். இதில், கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

 பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் வாக்குச் சாவடி அலுவலா்கள் பயிற்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் பேரூராட்சி 18 வாா்டுகளை கொண்டது. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பென்னாகரம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டு வரும் 18 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சிக் கூட்டம் பேரூராட்சி அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மண்டல அலுவலா் ரேவதி பிரேம்குமாா், சிவப்பிரகாசம் தலைமை வகித்தனா். பென்னாகரம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 18 வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் 66 வாக்குச் சாவடி அலுவலா்களிடம், வாக்குச் சாவடியில் மேற்கொள்ளும் பணிகள், வாக்குச் சாவடியில் வேட்பாளருக்கு, ஒரு முகவா் வீதம் அனுமதி, கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்கப்பட்டது.

பென்னாகரம் மற்றும் பாப்பாரப்பட்டி பேரூராட்சிகளில் நடைபெற்ற பயிற்சி கூட்டத்தைத் தோ்தல் மேலிட பொறுப்பாளா் பிருந்தாதேவி பாா்வையிட்டாா். இதேபோல் பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் வாக்குச் சாவடி முகவா் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் வட்டார பாா்வையாளா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா்கள் கீதா (பென்னாகரம்) கோமதி (பாப்பாரப்பட்டி) மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.