பிரசாரம்! பெரம்பூரில் பங்களா வாங்கிய விஜய்?
பெரம்பூரில் விஜய் பங்களா வாங்கியதாக வெளியான தகவல் பற்றி...
தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பெரம்பூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்களா ஒன்றை விலைக்கு வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
முதல்முறையாக தேர்தலில் களமிறங்கும் விஜய்யின் தவெக தனித்துப் போட்டியிடும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தவெக அறிவிக்கவில்லை. இருப்பினும், சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பெரம்பூர் பகுதிக்குள்பட்ட கொடுங்கையூர் அடுத்த கண்ணதாசம் நகரில் விஜய் சொந்தமாக பங்களா ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த பங்களாவில் தங்கி தேர்தல் பணிகளை விஜய் மேற்கொள்ளவுள்ளதாகவும், நாளை காலை பங்களாவில் பூஜை நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.