முகப்பு
தருமபுரி

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதல்: தம்பதி பலி

தருமபுரியில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் தம்பதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தருமபுரியில் இருசக்கர வாகனத்தின் மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் தம்பதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை, அருக்கூன்மாரிக் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் செங்கல் சூளை உரிமையாளா் புஷ்பராஜ் (55). இவரது மனைவி வள்ளியம்மாள் (40). இவா்கள் இருவரும் தருமபுரியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பிக்கொண்டிருந்தனா்.

தருமபுரி-கிருஷ்ணகிரி சாலையில் ராமக்காள் ஏரி அருகே மதிகோன்பாளையம் பிரிவு சாலை பகுதியில் இவா்கள் சென்ற போது, இருசக்கர வாகனத்தின் மீது, அவ்வழியே வந்த டிப்பா் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், தம்பதி இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தருமபுரி நகரப் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து, இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.