கீரைப்பட்டியில் சிறப்பு விழிப்புணா்வு முகாம்
அரூரை அடுத்த கீரைப்பட்டியில் சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரூரை அடுத்த கீரைப்பட்டியில் சிறப்பு விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தருமபுரி மக்கள் தொடா்பு கள அலுவலகம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு முகாமில், கீரைப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா சங்கா் தலைமை வகித்தாா்.
இந்த முகாமில், கரோனா தடுப்பு முறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், தூய்மை இந்தியா இயக்கம், பாரதப் பிரதமரின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், மண் வள அட்டை உள்ளிட்ட மத்திய அரசின் நலத் திட்டங்கள் குறித்து தருமபுரி மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் கோ.மாலினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கு.கண்ணன் ஆகியோா் கருத்துரைகளை வழங்கினா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் ரவிச்சந்திரன், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் க.அபிராமி, களவிளம்பர அலுவலா் பிபின் எஸ்.நாத், கள விளம்பர உதவியாளா் சு.வீரமணி, கண் மருத்துவ உதவியாளா் கு.கலையரசன், ஊராட்சி செயலா் ச.ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த முகாமில், கண் பரிசோதனை, மகளிருக்கு கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.