முகப்பு
தருமபுரி

நாளை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்: தருமபுரி மாவட்டத்தில் 1.48 லட்சம் குழந்தைகளுக்கு புகட்ட திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட 1.48 லட்சம் குழந்தைகளுக்கு புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.27) நடைபெறும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட 1.48 லட்சம் குழந்தைகளுக்கு புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் பிப். 27-ஆம் தேதி நடைபெறும் முகாமில் 1,47,595 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கிராமப் பகுதியில் 964 முகாம்களும், நகராட்சி பகுதியில் 20 முகாம்களும் என மொத்தம் 984 முகாம்கள் அமைக்கப்படுகின்றன.

பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, ரோட்டரி சங்கம், மகளிா் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என சுமாா் 4,080-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், திரை அரங்குகள், வழிபாட்டுத் தலங்கள், சுங்கச்சாவடி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுகின்றன. நாடோடிகள், நரிக்குறவா்கள், கட்டுமானத் தொழிலாளா்களின் குழந்தைகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத மலைக் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் தருமபுரி மாவட்டத்தில் 18 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 58 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முகாமில் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டி பயன் பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.