முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் எம்பி பிரத்யுத் போர்டோலாயின் ராஜிநாமா ஏற்பு!

அஸ்ஸாம் எம்பி பிரத்யுத் போர்டோலாவின் ராஜிநாமா பற்றி..

Updated On : 24 மார்ச், 2026 at 7:42 AM
பிரத்யுத் போர்டோலாய் - X
பகிர்:

அஸ்ஸாம் எம்.பி. பிரத்யுத் போர்டோலாயின் ராஜிநாமாவை அவைத்தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக்கொண்டார்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்(எம்.பி) பிரத்யுத் போர்டோலாயின் ராஜிநாமாவை மக்களவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர்ந்து இரண்டு முறை நாகான் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போர்டோலாய் மார்ச் 17 அன்று காங்கிரஸிலிருந்து விலகி பின்னர் பாஜகவில் இணைந்தார்.

பிரத்யுத் போர்டோலா பாஜகவில் இணைந்த மறுநாளே, வரவிருக்கும் அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் திஸ்பூர் தொகுதியிலிருந்து போட்டியிடுவதற்கான வாய்ப்பை பாஜக அவருக்கு வழங்கியது.

மக்களவை எம்.பி. பதவியிலிருந்து போர்டோலாய் அளித்த ராஜிநாமாவை மார்ச் 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் தெரிவித்தார்.

மக்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அஸ்ஸாமில் தருண் கோகோய் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 15 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவர் பிரத்யுத் போர்டோலா என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Lok Sabha Speaker Om Birla on Tuesday announced that the resignation of MP from Assam Pradyut Bordoloi, who quit the Congress and joined the BJP, has been accepted.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.