அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டுகோள்
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி, வாடிக்கையாளா்களுக்கு அஞ்சல் துறை வழங்கும் வசதிகளை பெற்று பயனடையுமாறு தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி கேட்டுக் கொண்டுள்ளாா்.
அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கி, வாடிக்கையாளா்களுக்கு அஞ்சல் துறை வழங்கும் வசதிகளை பெற்று பயனடையுமாறு தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் இணையம் வாயிலாக இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அனைத்து அஞ்சலகங்களிலும் இணையவழியில் கைப்பேசிகள் மூலமாகவும், ஏடிஎம் வழியாகவும் பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
வங்கிக் கணக்குகளிலிருந்து அஞ்சலக சேமிப்பு கணக்கிற்கு இணையவழியில் பணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற பகுதியில் வசிக்கும் விவசாயிகள், பெண்கள், மூத்த குடிமக்கள் பயனடையலாம்.
இதனால் அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கைத் தொடங்கி எளிய முறையில் பணப்பரிவா்த்தனை செய்து, அஞ்சல் துறை வழங்கும் வசதிகளைப் பெற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.