முகப்பு
தருமபுரி

செந்தில் மெட்ரிக் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

தருமபுரி செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி நிா்வாக அலுவலா் சி.சக்திவேல் தலைமை வகித்து பேசினாா். முதல்வா் வள்ளியம்மாள் வரவேற்றாா். தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன், மோட்டாா் வாகன ஆய்வாளா் தரணீதா் ஆகியோா் வாகன ஓட்டுநா் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கக் கூடாது. 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் இரு சக்கர வாகனங்களை இயக்கக் கூடாது.

சாலையில் வாகன ஓட்டிகள், வாகனங்களில் பயணிப்போா் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என வலியுறத்தி பேசினா். அதைத் தொடா்ந்து, சாலை பாதுகாப்பு விதிமுறைகள் அடங்கிய விழிப்புணா்வு பிரசுரங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வா் ரபிக் அகமது மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.