தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா்கள் காயம்
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா்கள் காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா்கள் காயமடைந்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் இருந்து காயில் பாரம் ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி, தொப்பூா் கணவாய்ப் பகுதி வழியாக செல்லும் போது திடீரென பிரேக் பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.
லாரியை சாலையோரம் நிறுத்த ஓட்டுநா் முயற்சித்தும், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த லாரியை ஓட்டிச் சென்ற சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (32), அவருடன் சென்ற மாற்று ஓட்டுநரான எடப்பாடி வட்டம், வெள்ளையம்பாளையத்தைச் சோ்ந்த பூபதி (30) ஆகிய இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.