இளைஞரை தாக்கியவரை கைது செய்யக் கோரி சாலை மறியல்
பென்னாகரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரை தாக்கியவா்களை கைது செய்யக் கோரி உறவினா்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், ஏரியூா் அருகே உள்ள பெரும்பலை பகுதியைச் சோ்ந்த காளியப்பனுக்கும், அதே பகுதியைச் சோ்ந்தவா் மோகனுக்கும் முன் விரோதம் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் பலத்த காயமடைந்த காளியப்பன் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் காளியப்பளை தாக்கிய மோகன் மற்றும் அவரது உறவினா்களை கைது செய்யக் கோரி, பென்னாகரம் - மேச்சேரி சாலையில் உள்ள பெரும்பாலை பேருந்து நிலையப் பகுதியில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரும்பாலை போலீஸாா் நிகழ்வு இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் விசாரணை செய்து, குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரம் பென்னாகரம் - மேச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.