பெண் வாக்காளா் அதிகமுள்ள அரூா் பேரூராட்சி !
அரூா் பேரூராட்சியில் பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.
அரூா் பேரூராட்சியில் பெண் வாக்காளா்கள் அதிகம் உள்ளனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி தலைவா் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரூா் பேரூராட்சியில் 12,181 பெண் வாக்காளா்கள், 11,124 ஆண் வாக்காளா்கள், திருநங்கையா் 3 பேரும் உள்ளனா். ஆண் வாக்காளா்களை விட பெண் வாக்காளா்கள் 1,057 போ் அதிகம் உள்ளனா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வேட்புமனு தாக்கல் முதல் நாள் வெள்ளிக்கிழமை அரூா் பேரூராட்சியில் ஒருவரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.