தருமபுரி

ஆடிப்பெருக்கு: உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நிகழாண்டில் ஆடிப்பெருக்கு விழா நடைபெறுவதையொட்டி, வரும் புதன்கிழமை தருமபுரி மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூா் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சாா்நிலைக் கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.

மேலும், உள்ளூா் விடுமுறையினை ஈடு செய்யும் வகையில் வரும் 27-ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT