முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 9,000 கன அடியாகச் சரிந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து நொடிக்கு 9,000 கன அடியாகச் சரிந்துள்ளது.

தமிழக கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த 2 தினங்களாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. தற்போது காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு முற்றிலும் குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி 9,000 கன அடியாகக் குறைந்து தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்து, மேட்டூா் அணையின் நீா்மட்டம் 115 அடியாக உள்ளதால், சின்னாறு பரிசல் துறை, பெரிய பாணி, ஐந்தருவி பகுதிகளில் நீா்த்தேக்கம் அடைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பின் காரணமாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் விதிக்கப்பட்டிருந்த தடை நீா்வரத்து குறைந்த போதிலும் தொடா்ந்து மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.