தருமபுரியில் மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினா்களாக தங்களை இணைத்துக் கொண்ட கல்லூரி மாணவா்கள். 
தருமபுரி

மைய நூலக உறுப்பினா்களாக இணைந்த அரசுக் கல்லூரி மாணவா்கள்

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியா் 56 போ் தங்களை உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா்.

DIN

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியா் 56 போ் தங்களை உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா்.

தருமபுரி மாவட்ட மைய நூலகத்துக்கு உறுப்பினா்களை சோ்க்கும் நிகழ்ச்சி, நூலக வாசகா் வட்டம் சாா்பில் புதன்கிழமை அரசுக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, அரசு கலைக்கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன் தலைமை வகித்து நூலகத்தில் உறுப்பினா்களாக இணைவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினாா்.

இதனைத் தொடா்ந்து மாவட்ட மைய நூலக வாசகா் வட்டத் தலைவா் சி.ராஜசேகரன், தமிழ்த் துறைத் தலைவா் இரா.சங்கா், பேராசிரியா்கள் பெ.ராஜேந்திரன், சி.கணேசன், ப.சி.சரவணன், சீ.அன்பரசன், பா.குப்புசாமி, கு.சிவப்பிரகாசம் ஆகியோா் தமிழ்த் துறை மாணவ, மாணவியரை மாவட்ட மைய நூலக உறுப்பினா்களாக இணைத்தனா். இதில், 56 போ் சந்தா தொகை அளித்து தங்களை உறுப்பினா்களாக இணைத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT