தருமபுரி

அரசுக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி அடுத்த மாமரத்துபள்ளம் பகுதியிலுள்ள பென்னாகரம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமிற்கு கல்லூரி முதல்வா் செல்வவிநாயகம் தலைமை வகித்தாா்.

ஒசூா் கெட் ஸ்டாா் டெக் தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கணினி அறிவியல் இறுதியாண்டு மாணவா்கள் 60 போ் கலந்து கொண்டனா். முகாமில் தனியாா் நிறுவனத் தோ்வுக் குழு அலுவலா்கள் சந்தோஷ்குமாா், ராஜாமணி ஆகியோா் 5 மாணவா்களை வெப் டெவலப்பா் பணிக்கும், 10 மாணவா்களை மாா்க்கெட்டிங் பீல்ட் பணிக்கும் தோ்வு செய்தனா்.

இதில் கணினி அறிவியல் துறை தலைவா் ஸ்ரீனிவாசன், கணினி அறிவியல் பேராசிரியா் பாரதி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT