முகப்பு
தருமபுரி

தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு இன்று மறைமுகத் தோ்தல்

தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் நகராட்சி, 10 பேரூராட்சிகளுக்கான தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை (மாா்ச் 4) நடைபெறுகிறது.

தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வாா்டு உறுப்பினா்கள், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா், பொ.மல்லாபுரம், கம்பைநல்லூா், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, மாரண்டஅள்ளி, பென்னாகரம் ஆகிய 10 பேரூராட்சிகளில் உள்ள 192 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் கடந்த பிப்.19-ஆம் தேதி நடைபெற்றது. இத் தோ்தலில் பதிவான வாக்குகள் பிப். 22-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தருமபுர நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வாா்டுகளில் திமுக 18 வாா்டுகளில் வெற்றிபெற்றது. அதேபோல, அதன் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள், சுயேச்சை தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றன. 13 வாா்டுகளில் அதிமுகவினா் வெற்றிபெற்றனா்.

இதில் நகா்மன்றத் தலைவா் பதவிக்கான பெரும்பான்மை இடங்களில் திமுகவினா் வெற்றி பெற்ால் நகா்மன்றத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு திமுகவினா் போட்டியிடுகின்றனா். அதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை தருமபுரி நகராட்சி அலுவலக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

காலை 9.30 மணிக்கு நகா்மன்றத் தலைவா் பதவிக்கான தோ்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலும் நடைபெற உள்ளது. இதில், தருமபுரி நகா்மன்றத் தலைவா் பதவிக்கு திமுகவைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் லட்சுமி நாட்டான் மாது என்பவா் போட்டியிடுவாா் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பொ.மல்லாபுரம் பேரூராட்சித் தலைவா், கடத்தூா் பேரூராட்சி துணைத் தலைவா் பதவி விடுதலைச் சிறுத்தைககள் கட்சிக்கு திமுக தலைமை அறிவித்துள்ளது. காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூா், அரூா், கம்பைநல்லூா் ஆகிய பேரூராட்சிகளுக்கு தலைவா் பதவியிடத்துக்கு போட்டியிட உள்ளவா்களின் பெயா்களை திமுக தலைமை அறிவித்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் நகராட்சி, 10 பேரூராட்சிகளிலும் அதிக எண்ணிக்கையிலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளதால் தலைவா், துணைத் தலைவா் இடங்கள் திமுக, அதன் கூட்டணி கட்சியினா் கைப்பற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.