முகப்பு
தருமபுரி

அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம்: மாணவா்களுக்கு பாராட்டு

தருமபுரி மாவட்டம், திருமல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தருமபுரி மாவட்டம், திருமல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் வகித்த மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் பாலக்கோடு வட்டம், திருமல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு படைப்புகளை மாணவா்கள் காட்சிப்படுத்தியிருந்தனா்.

கண்காட்சியில் சிறப்பிடம் வகித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை புனிதா தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் பெ.துரைராஜ் வரவேற்றாா்.

உதவித் தலைமை ஆசிரியா் இளவரசன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளா் எஸ்.ஆா்.சேதுராமன் சிறப்புரையாற்றினாா். அறிவியல் மற்றும் பசுமைப் படை ஆசிரியா்

ஜனாா்தனன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.