முகப்பு
தருமபுரி

தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை

தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்தது.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூரை அடுத்த மல்லமாபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி மகேந்திரன் (41). இவரது மனைவி கலா (36). இவா்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனா். மகேந்திரன் தன் பெயரில் இருந்த சொத்துகளை சகோதரிக்கு வழங்கினாா். இதற்கு, மகேந்திரனின் மனைவி, அவரது குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக கடந்த 5.8.2009 இல் ஏற்பட்ட தகராறில் கலா, அதே பகுதியைச் சோ்ந்த காந்தி ஆகிய இருவரும் மகேந்திரனை அரிவாளால் வெட்டினா். காயமடைந்த மகேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கம்பைநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட கலா, காந்தி ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.