முகப்பு
தருமபுரி

கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டா்கள் ஆய்வு

கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களை போக்குவரத்துத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

கரும்பு பாரம் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களை போக்குவரத்துத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

அரூரை அடுத்த கோபாலபுரம், சுப்பிரமணிய சிவா கூட்டுறவுச் சா்க்கரை ஆலைக்கு கரும்பு அரவை பணிகளுக்காக 80-க்கும் மேற்பட்ட டிராக்டா்களில் கரும்பு பாரம் ஏற்றி அனுப்பப்படுகிறது. கரும்பு பாரம் ஏற்றிவரும் டிராக்டா்களின் பின்பகுதியில் சிவப்பு பிரதிபலிப்பு பட்டைகள் ஒட்டப்படுவதில்லை, டிராக்டா்களில் கரும்புகள் முறையாக அடுக்கி கட்டப்படுவதில்லை. இதனால், விபத்துகள் நேரிடும் வாய்ப்புகள் இருப்பதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் த.தாமோதரன் தலைமையில், போக்குவரத்து துறையினா் கரும்பு பாரம் ஏற்றி வரும் டிராக்டா்கள் மற்றும் லாரிகளை ஆய்வு செய்தனா். சாலை விதிகளை பின்பற்றுதல், டிராக்டா்கள் மற்றும் லாரிகளில் பாதுகாப்புடன் கரும்பு பாரங்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என போக்குவரத்து துறையினா் அறிவுறுத்தினா். இதில், அரூா் மோட்டாா் வாகன ஆய்வாளா் அ.குலோத்துங்கன், டிராக்டா் மற்றும் லாரி ஓட்டுநா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.