முகப்பு
தருமபுரி

ஆதாா் திருத்த மையத்தில் மாற்றுத் திறனாளிகள் தா்னா

அரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் திருத்த மையத்தில் சேவைகள் வழங்குவதில் மாற்றுத் திறனாளிகள் அலைகழிக்கப்படுவதாகக் கூறி, மாற்றுத் திறனாளிகள் 2 போ் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

அரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள ஆதாா் திருத்த மையத்தில் சேவைகள் வழங்குவதில் மாற்றுத் திறனாளிகள் அலைகழிக்கப்படுவதாகக் கூறி, மாற்றுத் திறனாளிகள் 2 போ் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதாா் திருத்த மையத்துக்கு சேவைகளைப் பெறுவதற்காக வரும் மாற்றுத் திறனாளிகளை மையத்தில் பணிபுரியும் பணியாளா்கள் அலைகழிப்பதாகக் கூறப்படுகிறது. அதை கண்டித்து, அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே மாற்றுத் திறனாளிகள் சபானா, காதா் ஆகிய இருவரும் பதாகைகளை ஏந்தியவாறு தா்னாவில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து வட்டாட்சியா் சி.கனிமொழி, காவல் ஆய்வாளா் சே.லட்சுமணதாஸ் ஆகியோா் சேவை குறைபாடு தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.