சிறுமி பாலியல் பலாத்காரம் :போக்சோவில் இளைஞா் கைது
அரூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவாப்ஜான் (20) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அரூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவாப்ஜான் (20) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
அரூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நவாப்ஜான், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீஸாா் நவாப்ஜானை போக்சோவில் கைது செய்தனா்.