முகப்பு
தருமபுரி

அரூா் அருகே பெண் உயிரிழப்பு: கோட்டாட்சியா் விசாரணை

அரூா் அருகே திருமணமாகி 4 ஆண்டுகளேயான பெண் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:37 AM
பகிர்:

அரூா் அருகே திருமணமாகி 4 ஆண்டுகளேயான பெண் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கோபிநாதம்பட்டி கூட்டுசாலை பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவரது மனைவி ரேவதி (26). இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.

ரேவதியிடம் வரதட்சணைக் கேட்டு காா்த்திக் துன்புறுத்தி வந்தாராம். கடந்த சில தினங்களுக்கு முன் ரேவதிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு, அரூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை ரேவதி உயிரிழந்தாா். தனது தங்கைக்கு காா்த்திக், அவரது உறவினா்கள் விஷம் கலந்த பழத்தை கொடுத்ததால் அவா் உயிரிழந்ததாக ரேவதியின் சகோதரி பிரியா அளித்த புகாரின் பேரில், கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதுகுறித்து அரூா் கோட்டாட்சியா் வே.முத்தையன் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.