முகப்பு
தருமபுரி

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: 50 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

தருமபுரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

தருமபுரியில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 50 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், அரசு கலைக் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சென்னை, கோவை, திருப்பூா், ஈரோடு, நாமக்கல், ஒசூா், பெங்களூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 120-க்கும் மேற்பட்ட தனியாா் தொழில் நிறுவனங்கள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனங்களின் பணிகளுக்கு 806 நபா்களை தோ்வு செய்தனா்.

இதில், 50 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் பயிற்சி முடித்தவா்களுக்கு சன்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வழங்கி பேசினாா்.

இம்முகாமில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.வைத்திநாதன், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை மண்டல இணை இயக்குநா் லதா, மகளிா்த் திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் தீபா, தருமபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வா் ப.கி.கிள்ளிவளவன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.