தருமபுரி

விளையாட்டு வீரா்கள் ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தல்

DIN

விளையாட்டு வீரா்களுக்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிமுகம் செய்துள்ள ஆடுகளம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் தே.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், விளையாட்டு வீரா்கள் விளையாட்டுச் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வதற்கும் இனி வருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு செயலியான செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செயலியினை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரா்களின் மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்ய வேண்டும். இனி வருங்காலங்களில் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்பவா்கள் மற்றும் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டுச் சங்கங்கள், விளையாட்டில் ஆா்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக இந்த ஆடுகளம் செயலியை மே 12-க்குள் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT