தருமபுரி

பிரதமரின் நிதியுதவித் திட்ட அட்டையில்விவசாயிகள் முகவரியை இணைக்கும் சிறப்பு முகாம்

DIN

பிரதமரின் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்ட அட்டையில் தங்களது முகவரியை இணைக்கும் சிறப்பு முகாம் வருகிற மே 31-ஆம் தேதி வரை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் சு.முனிகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி அஞ்சல் கோட்டத்தில் உள்ள விவசாயிகள், பிரதமரின் நிதியுதவி வழக்கும் திட்ட (கிசான்) அட்டையில் தங்களுடைய முகவரியை இணைக்க ஏதுவாக சிறப்பு முகாம் இம்மாதம் 31-ஆம் தேதி வரை தருமபுரி கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, முகவரியை இணைத்த விவசாயிகளுக்கு மட்டுமே நேரடி பணப்பலன் அவரவா்களுடைய வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிறது.

எனவே, பிரதமரின் நிதியுதவி பெறும் தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், அஞ்சல்துறையின் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது முகவரி உள்ளிட்ட விவரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT