முகப்பு
தருமபுரி

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆா்.கே மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இ.ஆா்.கே. கல்லூரி முதல்வா் த.சக்தி தலைமை வகித்தாா். இ.ஆா்.கே கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் முகாமைத் தொடக்கிவைத்தாா். தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் தாமோதரன் பங்கேற்று ஓட்டுநா் உரிமம் பெறுவதின் அவசியம், பாதுகாப்பாக வாகனங்களை இயக்குவது, விதிமுறைகளை கடைப்படிப்பதன் அவசியம் குறித்து விளக்கினாா்.

மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கதிா்வேல், குலோத்துங்கன், கண்காணிப்பாளா் விஜயகுமாா், இ.ஆா்.கே. மருந்தாளுநா் பயிற்சி கல்லூரி முதல்வா் முத்துக்குமரன், நிா்வாக அலுவலா் சொ.அருள்குமாா், வேதியியல் துறைத் தலைவா் சிவக்குமாா் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.