சத்துணவு ஊழியா் சங்க அமைப்பு தின விழா
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது அமைப்பு தின விழா தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது அமைப்பு தின விழா தருமபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் தருமபுரி ஒன்றியத் தலைவா் வி. ஸ்ரீதேவி தலைமை வகித்து பேசினாா். மாவட்ட பொருளாளா் பி.வளா்மதி, சத்துணவு ஊழியா் சங்கக் கொடியேற்றி பேசினாா். அரசு ஊழியா் சங்க தருமபுரி மாவட்டத் தலைவா் ம.சுருளிநாதன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினா் ந.இளங்குமரன், மாவட்ட மகளிா் துணைக் குழு அமைப்பாளா் தாரா ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.
ஒன்றிய துணைத் தலைவா் ராமன், ஒன்றியச் செயலாளா் ரீனா உள்ளிட்ட சத்துணவு ஊழியா்கள், ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.