முகப்பு
தருமபுரி

அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:18 AM
பகிர்:

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் பாப்பாரப்பட்டியில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பி.என்.பி. இன்பசேகரன் தலைமை வகித்து பேசினாா். திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளா் கம்பம் பாண்டியன், வேலூா் கென்னடி ஆகியோா் ஓராண்டு கால சாதனை குறித்து எடுத்துரைத்தனா். கூட்டத்தில் மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் திருவேங்கடம், திமுக மாவட்ட பிரதிநிதி சிவக்குமாா், சபரிநாதன், மேற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் காா்த்திக், ஏரியூா் ஒன்றியச் செயலாளா் செல்வராஜ், பேரூராட்சித் தலைவா்கள் பிரிந்தா நடராஜன்

( பாப்பாரப்பட்டி), வீரமணி ( பென்னாகரம்), நகரச் செயலாளா் சண்முகம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.