அண்ணனை வெட்டிக் கொன்ற தம்பி தற்கொலை!
அண்ணனை வெட்டிக் கொலை செய்து தலைமறைவான தம்பி வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
அண்ணனை வெட்டிக் கொலை செய்து தலைமறைவான தம்பி வனப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா்.
பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டியை அடுத்துள்ள சக்கிலிநத்தம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேஷ் (45) கறவை மாட்டினை சூனியம் வைத்து கொன்ாக அவருடைய தம்பி குமாா் (40) கடந்த ஞாயிற்றுக்கிழமை அரிவாளால் வெங்கடேஷை வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனா்.
தலைமறைவான குமாா் கிடைக்காத நிலையில், தனிப்படை அமைத்து சக்கிலி நத்தம், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடி வந்த நிலையில், பிக்கிலி வனப்பகுதியில் குமாா் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.